Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. அதிகாரிகளின் செயல்…. சூப்பிரண்டின் உத்தரவு….!!

விபத்துகளை தடுக்க காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விபத்தை தடுக்க பல நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாமூர்த்தி மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லகுண்டா உள்பட 9 பகுதிகளில் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் 15 இடங்களில் முன்னெச்சரிக்கை தகவல் பலகைகள் காவல் நிலையம் சார்பாக அமைத்தனர்.

Categories

Tech |