சிறுவயதில் சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். அவர்களுக்கு தைரியம் கற்றுக் கொடுத்தே, பெரியவர்கள் மாய்ந்து போவார்கள். அடிக்கடி பயப்படுதலுக்கும், குழந்தைகளின் இரும்புச் சத்து பற்றாக்குறைக்கும் சம்பந்தம் உண்டு.
இந்த பிரச்சனையை சரிப்படுத்துவதற்காக அந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைத்திய முறை ஒன்று இருக்கிறது. அதன் பெயர் கொலி மோர். குழந்தைகள், கீழே தவறி விழுந்து அடிபட்டு, பயத்துடனே இருப்பார்கள், அல்லது ஏதாவது மோசமான காட்சிகளைக் கண்டாலும், பயத்துடனே காணப்படுவர்.
அதனாலேயே, எதிலும் ஈடுபாடு இல்லாமல், சோர்ந்து காணப்படுவர். அத்தகைய குழந்தைகளை, ஒரு வினாடியில், பயம் நீங்கி உற்சாகத் துள்ளல்களுடன் மற்றக் குழந்தைகளுடன் இயல்பாக விளையாட வைக்க, இந்த மிக எளிய வீட்டு மருத்துவம் உதவும்.
ஒரு டம்ளர் மோர், ஒரு இரும்புக்கரண்டி அல்லது இரும்பிலான சமையல் கருவி. அந்தக் கரண்டியை அடுப்பில் வைத்து கரண்டி நன்கு பழுத்துத் தணல் தோன்றும் வரை இடவேண்டும். பாதுகாப்பாக அதைப்பிடித்து, பயந்த குழந்தையை மோரையே பார்க்கச்சொல்லிவிட்டு, பழுத்த கரண்டியை மோர் டம்ளரில் இடவேண்டும்.
சர்ரென்ற சப்தத்துடன், தணல் மோரில் அணையும் அந்த நிகழ்வை, குழந்தை அவசியம் பார்க்கவேண்டும். பிறகு அந்த மோரை, குழந்தை பருகவேண்டும். சிறிது போதும், அவ்வளவுதான். குழந்தையின் பயம் போயே போச்சு, குழந்தையை விட்டு, ஓடிடுச்சி. இந்த பயத்திற்கு, மருத்துவர் என்ன பரிந்துரைப்பார்,எத்தனை ரசாயன மருந்துகள், சிரப்கள், எத்தனை பக்க விளைவுகள்..
வீட்டிலேயே, நிவாரணம் இருக்கும்போது, வேறு முறை எதற்கு.. அதிக செலவு செய்து வைத்தியம் பார்த்தால்தான், பலிக்கும், என்ற தற்கால மூட சிந்தனைப் போக்கை முறியடித்து, பெரியோரை மதிப்போம்!
அட்லீஸ்ட், உங்கள் குழந்தைகளுக்காக, உங்கள் மனைவிக்காக, ஏன் உங்களுக்காகக்கூட, அவர்கள் தரும் எதிர்பார்ப்பில்லாத, ஆத்மார்த்தமான சின்ன சின்ன ஆலோசனைகள் உங்களுக்கு மிகப்பெரும் செல்வமாகும்! உடல் செல்வத்துடன், பொருள் செல்வமும் சேரும்!