Categories
உலக செய்திகள்

மூன்றில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை….. அதிர்ச்சித் தகவல்….

உலக அளவில் பாதிக்கு பாதி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்… உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் வெளியான தகவல்…

உலக அளவில் “3 ல் ஒரு பெண் பாலியல் வன் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்”என்பது உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கடந்த 8ஆம் தேதி “உலக பெண்கள் தினம்” கொண்டாடப்பட்டு பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தனர். பெண்களைப் போற்றி ஒருவருக்கொருவர் வாழ்த்தி கொண்டனர். அதனை கெடுக்கும் வண்ணமாக பாலியல் வன்கொடுமை அதிக அளவில் அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் தான், ஐ.நா. சுகாதார நிறுவனம் ஆய்வினை ஒன்று நடத்தியது, இதில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாள் பாலியல் வன்முறைக்கு தள்ளப்பட்டு அதனை அனுபவிக்கும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர், என்று தெரியவந்துள்ளது.

இதுபோன்ற வன்கொடுமைகள் 20 வயது அடையும் முன்பே தங்களுக்கு நெருக்கமான உறவுகளால் பெண்கள் அனுபவிக்கின்றன. இந்த ஆய்வின் மூலம் “கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இல்லாத அளவிற்கு இந்த கொரோனா  காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது”என்று ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. இவற்றில் ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 15 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அதிக அளவு தங்கள் துணையையே  மிக அதிகமாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதும் தெரிகிறது.

உலக அளவில் இதுவரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சுற்றியுள்ள உறவுகளே ஏற்பட்டுள்ளது என்றும், இதன் மூலமாக சுமார் 641 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 6 சதவீதம் பேர் வெளி நபர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்த போது பல நாடுகளில் அனைத்துத் தரப்பினருக்கும் பெண்களிலும் பாதிக்குப் பாதி பேர் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இதனிடையே கடந்த 2019ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் டெல்லி முதலிடம் என்றும், மும்பை இரண்டாவது இடம் என்றும், பெங்களூர் மூன்றாமிடம் என்றும் தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம்  சில நாட்களுக்கு முன்பே  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |