சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் ஆதரவற்ற சிறுமியின் கல்வி கட்டணத்தை முழுவதுமாக ஏற்று கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னாவாசல் பகுதியை சேர்ந்த ராகுல் அமீது மற்றும் அவரது மகன் முகம்மது சாலிக். சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். இதனைதொடர்ந்து சாகுல் அமீதின் 5 வயது மகள் கல்வி பயில முடியாத சூழ்நிலையில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சாகுல் அமீது இல்லத்திற்கு சென்று அவரது மகள் சாலிஹாவின் கல்வி செலவை ஏற்றுக்கொள்ளவதாக கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சாலிஹாவின் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஏற்படும் அனைத்து கல்வி செலவையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளவதாக கூறி உறுதிக் கடிதத்தை சாகுல் அமீதின் மனைவியிடம் வழங்கினர். திரையுலக நடிகர்களின் பிறந்தநாள் என்று வரும்போது அவரின் ரசிகர்கள் பாலபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது, பேனர் வைப்பது, அப்படியில்லாமல் அதனை மாற்றும் வகையில் ஆதரவற்ற குழந்தையின் படிப்புக்கான முழு தொகையையும் ஏற்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ள நடிகர் சூர்யா நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.