Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக தகராறு ….. கட்டையால் கொடூரமாக தாக்கிய காவலர் …. 2 பேர் படுகாயம் ….!!!

சீர்காழி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் காவலர் உட்பட  4 பேர் மீது காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்துள்ளனர் .

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே  ஈசானிய தெருவை சேர்ந்த  தனசேகரன் என்பவர் வைத்தீஸ்வரன் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சீர்காழி  பன்னீர்செல்வம் நகரை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும், தனசேகரன் உறவினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது .இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதீப் அவரது உறவினரான  கொண்டத்தூர் கிராமம் தெற்கு பண்டாரவாடை கிராமத்தைச் சேர்ந்தஅமித் ராஜ் என்பவருடன்  தனசேகரன் உறவினர் வீட்டுக்கு சென்று  தகராறில் ஈடுபட்டுள்ளார் .இது குறித்து தகவலறிந்த காவலர் தனசேகரன் இருவரையும் சமாதானம் செய்துள்ளார் .

ஆனால் அவர்கள் மீண்டும் ரகளையில் ஈடுபட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தனசேகரன் கட்டையால் இருவரையும் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரதீப் ,அமிர்தராஜ் இருவரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக அமிர்தராஜ் கொடுத்த புகாரின் சீர்காழி காவல்துறையினர் காவலர் தனசேகரன் மற்றும் ஈசானித் தெருவை சேர்ந்த பாபு ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் .இதேபோல் தகராறில் ஈடுபட்ட பிரதீப் ஆனந்த்ராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |