Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… விவசாயிக்கு நடந்த விபரீதம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய அண்ணன்-தம்பி இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அச்சு தராயபுரம் பகுதியில் விவசாயியான அருள் பூபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கேசவன் என்பவருக்கும் இடையே வேலி பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் பூபதியின் மனைவியான சுதா தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள வாசலைப் பெருக்கி அந்த குப்பைகளை கேசவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள வாசலில் போட்டுவிட்டார். இதனையறிந்த கேசவன் அருள்பூபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து கேசவன் தனது தம்பியான சவுந்தராஜன் என்பவருடன் இணைந்து சுதா மற்றும் அருள் பூபதி இருவரையும் தாக்கி உள்ளனர். அதன் பிறகு கோபமடைந்த கேசவன் மற்றும் சவுந்தர்ராஜன் அரிவாளை எடுத்து அருள்பூபதியை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் காயமடைந்த அருள் பூபதியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அருள் பூபதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விவசாயியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய அண்ணன், தம்பி இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |