Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே முன்விரோதம் இருக்கு…. இளம்பெண்ணை சிறை வைத்த தி.மு.க பிரமுகர்…. கடலூரில் பரபரப்பு….!!

இளம் பெண்ணை வீட்டில் பூட்டி சிறை வைத்த தி.மு.க பிரமுகரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள பழமலைநாதர் நகர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.புதூர் கிராமத்தில் இருக்கும் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக நாற்பத்தி மூன்று லட்சத்திற்கு தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் விற்பனை செய்துள்ளார். இதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் தி.மு.க பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் இரவு நேரத்தில் சுப்பிரமணியனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் சுப்பிரமணியனின் மகள் தேவி மட்டும் இருந்திருக்கிறார். அதன்பின் தி.மு.க பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டின் வெளிப்புற கேட்டை இழுத்து பூட்டி பூட்டு போட்டு விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பூட்டை உடைத்து இளம்பெண்ணை மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தி.மு.க பிரமுகரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |