தென்காசியில் உள்ள முப்பெருந்தேவியர் கோவிலில் 1,008 லிட்டர் பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் தேவியர்பவானி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன், பாலவிநாயகர், புற்றுக் காளி, நாகக்காளி, சூலகாளி ,ரத்தகாளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் பவுர்ணமியை முன்னிட்டு அந்த கோவிலில் உள்ள அம்மன்களுக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகமும் அதைத்தொடர்ந்து 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறுவதற்கு காரணம் உலக நன்மைக்காகவும், மழை பொழிய வேண்டும் என்றும் கொரோனா பாதிப்பு முழுமையாக அழிந்து போவதற்கு வேண்டி இந்த சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது என்று குருநாதர் சக்தியம்மா தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பக்தர்கள் அதிகமாக பங்கேற்றால் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதால் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.