Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முறைகேடாக அமைத்த குழாய்…. பொதுமக்கள் வாக்குவாதம்…. ஆணையாளரின் உத்தரவு….!!

முறைகேடாக அமைத்த குடிநீர் குழாய்களை துண்டிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி சார்பாக இப்பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் மஞ்சக்குப்பம் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் நகராட்சி அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றிருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.

அந்த புகாரின் படி குடிநீர் குழாய் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று அங்கே இருக்கும் 53 வீடுகளில் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றிருந்ததை கண்டுபிடித்து அதை துண்டிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து குழாய் இணைப்புகள் அனைத்தையும் துண்டித்துள்ளனர்.

Categories

Tech |