டிரைவரை கொலை செய்த ஒருவரை வாடிப்பட்டி அருகே போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் இருக்கும் ராமநாயக்கன்பட்டியைச் சார்ந்தவர் ரகுராஜ். இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கருப்பட்டியை சார்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி ராஜேஷ்குமார், முருகன், சுரேஷ் ஆகியோர் ரகுராஜை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அந்த சமயத்தில் ராஜேஷ்குமார் கத்தரிக்கோலை எடுத்து ரகுராஜ் என்பவரின் வயிற்றில் குத்திக் கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாடிப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகுராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் கொலை செய்த ராஜேஷ்குமாரை கரட்டுப்பட்டி பஸ் நிறுத்தத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சுரேஷ் மற்றும் முருகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.