Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக இப்படியா….? உறவினர்களால் பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை…. போலீஸ் விசாரணை…..!!

சொத்து தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள பெருந்துறையை சேர்ந்தவர் முகமது கவுஸ். இவரது மனைவி காத்தூன் பீவி. அவருடைய பூர்வீக இடம் ஒன்றில் வீடு கட்டி வசித்து வருகிறார். இது தொடர்பாக அவரது சகோதரர் சகோதரிகளிடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை உறவினர்கள் அரிவாள்மனை கொண்டு தாக்கியதில் காத்தூன் பீவி பலத்த காயம் அடைந்தார்.

உயிருக்கு போராடிய நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காத்தூன் பீவி உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |