Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பிக்காக…. கத்திகுத்து வாங்கிய அண்ணன்….. பரிதாப மரணம்….!!

சென்னை அருகே தம்பி செய்த தவறுக்காக அண்ணன் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரும்பாக்கம் பெரியார் நகரில் வசித்து வந்தவர் கிரிதரன். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரது தம்பி ரமேஷ் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷ் பக்கத்து தெருவில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை காரணமின்றி அடித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுவன் அதே ஏரியாவில் உள்ள சிவா என்ற நபரிடம் புகார் அளிக்க,

அவர் தனது நண்பர்களுடன் ரமேஷை தேடி சென்றுள்ளார்.  அங்கு ரமேஷ் காணாததால் அவரது அண்ணன் கிரிதரனிடம் தட்டிக் கேட்டுள்ளனர். இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட ஆத்திரமடைந்த சிவா, கிரிதரனை மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். தடுக்க முன் வந்த கிரிதரன் நண்பன் ஆனந்துக்கும் கத்திக்குத்து விழுந்தது.

பின் ஆனந்தன் அலறல் சதத்தை கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் கிரிதரன் பரிதாபமாக உயிரிழக்க, ஆனந்தனை மட்டும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து  தப்பி ஓடிய சிவா உட்பட அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |