Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபர்…. காதலியின் குடும்பத்தினர் செய்த சம்பவம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை அடித்துக் கொன்ற காதலியின் அண்ணன் மற்றும் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுவிஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஊரில் வசிக்கும் முத்தமிழ்செல்வனின் மகன் அஜித் குமார் என்பவரும் அழகுவிஜய்யும் நண்பர்கள். இவரது வீட்டிற்கு அழகுவிஜய் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அஜித்குமாரின் 18 வயது தங்கைக்கும் அழகுவிஜய்க்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் அஜித்குமாருக்கு தெரியவந்ததால் அவர்கள் இருவரையும் இவர் கண்டித்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி அஜித்குமாரின் வீட்டில் அவரது தங்கை தனியாக இருந்துள்ளார். அப்போது அழகுவிஜய் தனது காதலியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இருவரும் தனியாக பேசிக் கொண்டிருந்த போது தங்கள் வீட்டிற்கு வந்த அஜித் குமார் பார்த்து ஆத்திரமடைந்தார்.

இதனையடுத்து உருட்டுக்கட்டையால் அழகு விஜயை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அழகு விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் அஜித்குமார் அழகுவிஜயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஆத்தூர் காமராஜர் அணை அருகில் உள்ள முட்புதரில் வீசிச் சென்றுள்ளார். இதற்கு அவரது தந்தை முத்தமிழ்செல்வனும் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செம்பட்டி காவல்துறையினர் அஜித்குமார் மற்றும் அவரது தந்தை முத்தமிழ்செல்வனையும் வலைவீசி தேடி வந்துள்ளனர். இதற்கிடையே முத்தமிழ்செல்வன்காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் அஜித்குமார் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் புல்வெட்டிகுளம் பகுதியில் தலைமறைவாகியிருந்த அஜித்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

Categories

Tech |