தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரை நில விற்பனை தொழிலதிபர் கொலை வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காந்தி நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான பங்க்பாபு வசித்து வந்தார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்த விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அதிமுக பிரமுகரான கனகராஜ் என்பவரை கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக கூலிப்படை மூலம் கனகராஜின் மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் சேர்ந்து பங்குபாபுவை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூலிப்படையில் உள்ள 6 பேர் உட்பட 14 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.