Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ரவுடியை வெட்டி சாய்த்த கும்பல்…. போலீசின் அதிரடி வேட்டை…. இருவர் கைது….!!

வில்லியனூரில் ரவுடியை சரமாரியாக வெட்டி கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள மணவெளி காசிவிசுவநாதர் பகுதியில் மதன் என்பவர் வசித்து வரந்தார். பிரபல ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் இருந்துள்ளன. இந்நிலையில் இவர் இரவில் வழக்கம்போல தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அரசு சாராய ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மர்ம கும்பல் ஒன்று மதனின் மோட்டார் சைக்கிளை மறித்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு பின் தப்பி ஓடினர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வில்லியனூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மணவெளி பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கும் மதனுக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. ஆதலால் வேலுவும் அவரது நண்பர்களும் சேர்ந்து மதனை பழிதீர்த்தப்பதற்க்காக வெட்டி கொலை செய்துள்ளனர். இதையடுத்து வில்லியனூர் போலீசார் தலைமறைவான வேலு மற்றும் அவரது நண்பர் கட்டவிஜி என்பவரையும் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |