தந்தையை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி பகுதியில் கோழி கடை வைத்து நடத்துபவர் சொர்ணலிங்கம். இவருடைய மகன் பிரதீப் ராஜா. இவர் தனது தந்தையிடம் மகள்களுக்கு மட்டும் எல்லாம் செய்கிறீர்கள் எனக்கு எதுவும் செய்யவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி பிரதீப் ராஜா கோழி கடையில் கோழி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது தந்தையான சொர்ணலிங்கத்தின் இடது கழுத்து மற்றும் பின் தலையில் பலமாக குத்தியுள்ளார்.
இதில் சொர்ணலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சொர்ணலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை செய்த பிரதீப் ராஜாவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.