Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

2 சென்ட் நிலம்தான் பிரச்சனை… அதிமுக கிளை செயலாளரின் செயல்… திமலையில் பரபரப்பு…!!

டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தவரை அதிமுக நிர்வாகி அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருபவர் துரைக்கண்ணு. அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளரான துரை என்பவருக்கும் துரைக்கண்ணுக்கும் 2 சென்ட் நிலம் வழங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் நேற்று முன்தினம் முற்றியதால் துரை மற்றும் அவரது மனைவி தீபா மற்றும் அப்பா முனுசாமி ஆகியோர் துரைகண்ணை கட்டையால் தாக்கிவிட்டு கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் துரைமுருகன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரை, தீபா மற்றும் முனுசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |