Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“கணவருக்கு துரோகம்” கத்தரிக்கோலால் குத்தி படுகொலை…. கள்ளக்காதலன் கைது…!!

செங்கல்பட்டு அருகே பெண் ஒருவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் யசோதா ராணி. இவருக்கு பெருங்குளத்தூர் பாரதி  நகரில் தையல் கடை ஒன்று உள்ளது. சொந்தமாக கடை நடத்தி வரும் இவருக்கும்,  தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்ற நபருக்கும் ஏற்கனவே தொடர்பு ஏற்பட்டு அது நட்பாக மாறி தற்போது கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது யசோதாவின் கணவருக்கு தெரியாது.

யசோதாவுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கள்ளக்காதலன்  செல்வகுமார் நேற்று மதியம் யசோதாவின்  கடைக்குச் சென்று அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென ஆத்திரமடைந்து கத்தரிக்கோலால் அவரது கழுத்தில் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க, காவல் நிலையத்தில் தகவல்தெரிவிக்கப்படவே,  சம்பவ இடத்திற்கு விரைந்த  அதிகாரிகள் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின் கொலையாளி செல்வகுமாரை  சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ட்ரெஸ் செய்து, பெருங்களத்தூர் தோட்டத்தின் அருகே வைத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சென்னை தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் என்பதும்,  ஏற்கனவே இவருக்கு திருமணமாகி மனைவி இருந்த நிலையில்,  திருமணத்திற்கு முன்பு யசோதாவுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவர, செல்வகுமாரிடம் இருந்து விவாகரத்து வாங்கி அவரது மனைவி பிரிந்து சென்றதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மனைவி பிரிந்து செல்ல மீண்டும் யசோதா  ராணியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் யசோதா செல்வாவை போல் வேறொரு நபரிடமும் ரகசியமாக செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதை விரும்பாத செல்வகுமார் நான் இருக்கும்போதே மற்றவரிடம் ஏன் பேசுகிறாய் என்று ஆதங்கத்தில் கேட்க, என்னை கண்டிக்க நீ யார் என் கணவனா என்று அவர் கூறவே, ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

பின்  அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த, கணவன்  இருக்கும்போதே  அவருக்குத் துரோகம் செய்ததால் தான்  பெண்ணுக்கு இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததாக  அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |