Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போனவர் இன்னும் வீட்டுக்கு வரல… கூலி தொழிலாளியின் மர்ம மரணம்… விசாரணையில் போலீஸ்…!!

கூலி தொழிலாளியை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள பாலக்கோம்பை கிராமத்தில் வெள்ளத்துரை என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தேங்காய் உறிக்கும் வேலை செய்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வேலைக்கு சென்ற அவர் நேற்று வீடு திரும்பாததால் பல இடங்களில் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்கள் திரும்பவும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அதன்பின் இன்று அதிகாலை சுடுகாடு அருகே வெள்ளத்துரை தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவருடைய தலையில் கொடூரமான முறையில் தாக்கபட்டதால் வெள்ளத்துரை உயிரிழந்திருப்பார் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து வெள்ளை துரையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வெள்ளைத்துரை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா  அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |