Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் கணவனின் செயல்… ஆத்திரமடைந்த மனைவி… தவிக்கும் பிள்ளைகள்…!!

மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனை கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் வேதகிரி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான வேதகிரி தனது பெயரில் உள்ள 12 ஏக்கர் நிலத்தையும் விற்று அந்த பணத்தை வைத்து குடித்துக்கொண்டு ஊர் சுற்றி திரிந்துள்ளார். இதனை அவரது தாயும் மனைவியும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் யாருடைய சொல்லையும் கேட்காததால் சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அவருடைய மனைவி சித்ரா மற்றும் தாய் ராஜேஸ்வரி இருவரும் வேதகிரியின் கழுத்தில் துண்டால் இறுக்கியுள்ளனர். இதில் அவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். இதை பற்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேதகிரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் சித்ராவிடம் விசாரணை நடத்தியபோது அவர் நடந்த உண்மையை கூறியுள்ளார். அதன்பின் காவல்துறையினர் வேதகிரியின் தாய் மற்றும் மனைவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |