Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நிலத்தகராறால் எழுந்த வன்மம்… தே.மு.தி.க பிரமுகருக்கு சரமாரி வெட்டு… காஞ்சிபுரத்தில் பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க நகர துணை செயலாளரை 2 பேர் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்தார். ராஜ்குமார் தே.மு.தி.க கட்சியின் நகர துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். மேலும் இவர் அதே பகுதியில், டெய்லர் கடை ஒன்றை வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜே.என்.. சாலை பகுதியில் உள்ள ஆற்றங்கரை புறம்போக்கு நிலத்தை அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் அரசியல் பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சி செய்துள்ளார். அந்த நிலத்தில் ஏற்கனவே கட்டிடம் கட்டி இருந்த ஒருவருக்கு ராஜ்குமார் ஆதரவாக பேசியுள்ளார்.

இதனால் அரசியல் பிரமுகருக்கும், ராஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வன்மத்தில் இருந்து வந்த அரசியல் பிரமுகர் அதே பகுதியில் வசித்து வரும் ரஞ்சித் குமார் என்பவரை ராஜ்குமாரை கொலை செய்யுமாறு தூண்டியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜ்குமார் வழக்கம்போல் டெய்லர் கடையை இரவில் பூட்டிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த ரஞ்சித் குமார் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் ராஜ்குமாரை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினார்.

அதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ராஜ்குமாரை அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலைக்கு முக்கிய காரணமான அரசியல் பிரமுகரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |