திண்டுக்கல் அருகே மகனை தந்தையே கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் திண்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகன் விக்னேஸ்வரன். இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். விக்னேஷ் சேராத நண்பர்களுடன் சேர்ந்து பல தீய பழக்கங்களை பழகி பெற்றோர்களை நாள்தோறும் டார்ச்சர் செய்து வந்துள்ளார். அந்த வகையில்,
மது பழக்கத்திற்கு தீவிரமாக அடிமையானவர் விக்னேஷ். நாள்தோறும் மது அருந்திவிட்டு தனது பெற்றோர்களிடம் சண்டை இடுவது வழக்கம். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல மது அருந்திவிட்டு வந்த விக்னேஸ்வரன் சற்று எல்லையை மீறி தனது தாய் மற்றும் தந்தையரை தாக்கி வீட்டை விட்டு வெளியே செல்லும்படி அடித்து துரத்தி உள்ளார். பின் அவர்கள் இருவரும் அருகில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டில் தங்கியுள்ளனர்.
இரவு முழுவதும் பெற்றோர்கள் என்றும் கூட பாராமல் அடித்து வீட்டை விட்டு வெளியேற்றிய வருத்தத்தில் தூங்காமல் அய்யப்பன் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து ஆத்திரம் கொண்ட அவர், அதிகாலை உறவினர் வீட்டில் இருந்து எழுந்து சென்று தனது வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கே அவரது மகன் முழு குடிபோதையில் மயங்கி கிடக்க ஆத்திரம் கொண்ட அய்யப்பன் வீட்டின் அருகே இருந்த பெரிய கல்லை எடுத்து வந்து அவரது தலையில் போட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.
பின் இதுகுறித்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முகம் மற்றும் தலை சிதறி இறந்து கிடந்த விக்னேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இது குறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விக்னேஸ்வரனின் தந்தையை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.