Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன விட்டுட்டு போகாதே…. ஆத்திரத்தில் கணவனின் செயல்…. பிரிந்த மனைவிக்கு நேர்ந்த கொடுமை….!!

தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்புதூர் பகுதியில் கஸ்தூரி என்ற பெண் வாழ்ந்து வந்தார். இவருக்கும் புளியங்குடியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கண்ணனுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களுக்கு திருமணம் முடிந்த பிறகு தான் கஸ்தூரிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது கண்ணனுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தினால் கஸ்தூரி கோபித்துக் கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அவரை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக கண்ணன் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு கஸ்தூரி வேலைக்கு சென்றிருப்பதாகவும் திரும்பி வந்ததும் அவரை அனுப்பி வைப்பதாகவும் பாட்டி கூறியதை அடுத்து அவர் கொஞ்ச நேரம் காத்திருந்த பின் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

அதன்பின் அவர் புளியரை சாலையில் தனது இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கஸ்தூரியை அவர் இரு சக்கர வாகனம் கொண்டு மோதி கீழே தள்ளியுள்ளார். பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். உடனே அப்பகுதியில் பதுங்கியிருந்த கண்ணனை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர்.

இந்த விசாரணையில் திருமணத்திற்கு முன்பு கஸ்தூரி வேறு இளைஞரை காதலித்ததாகவும் ஆனால் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து விட்டதால் கஸ்தூரி என்னை திருமணம் செய்துள்ளார். ஆனால் கஸ்தூரியால் அந்த இளைஞரை மறக்க முடியவில்லை. அதனால் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதால் நான் என் பழைய காதலனுடன் வாழப் போவதாக கஸ்தூரி கூறியுள்ளார். அதனால் நான் ஆத்திரமடைந்து இவ்வாறு செய்து விட்டேன் என்று கண்ணன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |