Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எண்ணெய் வியாபாரி கொலை…. ரோந்து பணியில் சிக்கிய மர்மநபர்கள்…. ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி….!!

வீடு புகுந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராமநாதன் செட்டியார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 15ஆம் தேதி தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ராமநாதனிடம் நகை பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக ராமநாதன் வீட்டில் இருந்த நகை பணம் அனைத்தையும் எடுத்து கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து கொள்ளையர்கள் அதை வாங்கிவிட்டு ராமநாதனை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் காவல்துறையினர் கடந்த ஜூலை மாதம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் அவர்கள் ராமநாதனை கொலை செய்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அப்பகுதிகளை சேர்ந்த தங்கபாண்டியன், வினோத், ஹரிஹரன், ரஞ்சன், பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளனர். மேலும் விரைவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆயுள் தண்டனையும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |