Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொழிலாளியின் மர்ம மரணம்…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!

தொழிலாளி மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரி பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நெப்பத்தூர் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் தொழிலாளி சீனிவாசன் இறந்து கிடந்துள்ளார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரி அவரது உறவினர்கள், கிராம மக்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், தேசிய தமிழ் பேரியக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆகியவை போன்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 25 பேரை கைது செய்துள்ளனர்.

இதேபோல் கொள்ளிடத்தில் தமிழர் உரிமை இயக்கம் மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் புத்தூர் மெயின்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்ட 103 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஆத்தூர் முக்கூட்டு சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஐயப்பன் பேட்டை பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.

Categories

Tech |