Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இரவில் நடந்தது என்ன….? தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் திருப்புவனம் பகுதியில் மகாலிங்கம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவரும் மேலும் மூன்று பேரும் சேர்ந்து திருச்சி சாலையில் உள்ள காதிர் நகர் பகுதிகளில் இருக்கும் மனைகளில் வேலி அமைக்கும் பணிக்காக சென்றுள்ளனர். அவர்கள் பகலில் வேலை செய்துவிட்டு இரவில் அதன் அருகில் உள்ள கட்டிடத்தில் தங்கி வந்தனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவு மகாலிங்கம் கீழ்தளத்தில் உள்ள போர்டிகோவில் படுத்து தூங்கியுள்ளார். மேலும் மற்ற மூவரும் அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து வழக்கம்போல் மாடியில் படுத்தவர்கள் கீழே இறங்கி வரும்போது மகாலிங்கம் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.

இதனை கண்டதும் அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகாலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |