Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென்று காணாமல் போன யோகா ஆசிரியை…. குளியலறைக்குள் புதைத்த வழக்கறிஞர்…. அதிர்ச்சி தரும் பின்னணி….!!

வழக்கறிஞர் வீட்டின் குளியலறைக்குள் யோகா ஆசிரியை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து பத்து வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் வசித்த வீட்டின் அருகில் சித்ரா தேவி என்ற யோகா ஆசிரியை வசித்து வந்தார். இவரும் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதன்பின் ஹரிகிருஷ்ணன் தனது மகளை சித்ரா தேவியிடம் யோகா வகுப்பிற்கு அனுப்பியுள்ளார். இதனால் ஹரி கிருஷ்ணனுக்கும் சித்ராதேவிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். கடந்த மாதம் 2-ஆம் தேதி சித்ராதேவி தனது இரு சக்கர வாகனத்துடன் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் தேர்தலைக் காரணம் காட்டி வழக்கை கிடப்பில் போட்டு வந்துள்ளனர். மேலும் சித்ரா தேவியின் தந்தை வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் தனது மகளை கொன்று இருக்கலாம் எனவும் கூறி போலீசாரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில் ஹரி கிருஷ்ணன் கூறியதாவது “சித்ராதேவியை நானே கொலை செய்தேன். பின்னர் அவரை எனது வீட்டில் குளியல் அறையில் புதைத்துவிட்டேன். இது அனைத்தும் நானே செய்தேன். மேலும் எனது சாவுக்கு வேறு யாரும் காரணம் அல்ல. நான் செய்த குற்றத்திற்கு தண்டனை அளிக்கும் விதமாகவே நான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்” என எழுதி இருந்தார்.

மேலும் சித்ராதேவியை ஹரிகிருஷ்ணன் வீட்டுக்கு அழைத்து வந்தபோது அவருடன் நடத்தை காரணமாக ஏற்பட்ட தகராறில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன் சித்ராவை பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பதும் அந்த கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |