Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மாரடைப்பால் இறந்து போயிட்டாங்க…. நாடகமாடிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. விசாரணையில் அம்பலமான உண்மை….!!

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாசரி பள்ளி பகுதியில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருகின்றனர். இதில் ரமேஷ் கிருஷ்ணகிரி டேம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மாரடைப்பால் இறந்துவிட்டதாக கடந்த 23ஆம் தேதி காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ராஜலட்சுமியின் கழுத்தில் காயம் இருந்ததை கவனித்தனர். அதன்பின் அவரது உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அவரது கணவர் சப்-இன்ஸ்பெக்டரான ரமேஷிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக ராஜலட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் அதன் பின் மாரடைப்பால் இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |