மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திலகர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் பிரியா பணியாற்றி வந்த பனியன் நிறுவனத்தில் திருவாரூர் பகுதியில் வசிக்கும் தமிழரசன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து பிரியாவ்க்கும் தமிழரசனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி பழகி வந்தனர்.
இந்த விவகாரம் நாளடைவில் சசிகுமாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகுமார் பிரியாவையும், தமிழரசனையும் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில் பிரியா சசிகுமாரிடம் இரவு நேர வேலை என கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சசிக்குமார் மனைவி வேலை செய்யும் பனியன் நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது அங்கு பிரியா இல்லை. இதனையடுத்து சசிகுமார் வேலம்பாளையம் பகுதியில் வசிக்கும் தமிழரசனின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு தமிழரசனும் பிரியாவும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் தமிழரசனிடம் எனது மனைவியுடனான தொடர்பை கைவிடுமாறு எத்தனை முறை கூறினாலும் நீ தொடர்பு வைத்துள்ளாய் என்று தட்டி கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தமிழரசனின் தலையில் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சசிக்குமார் வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த விவரத்தை கூறி சரணடைந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசனின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சசிக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.