Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரகசியமாக சந்திக்க வந்த கள்ளக்காதலன்…. டிரைவரின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரகசியமாக சந்திக்க வந்த மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டி கொலை செய்த டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள சொக்ககிழவன்பட்டி பகுதியில் ஆண்டிக்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நெவ்வாயி என்ற மனைவி உள்ளார். இவருக்கும் வேங்கைபட்டி பகுதியில் வசிக்கும் இளையராஜா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இளையராஜா வீட்டில் ஆண்டிக்காளையின் வீட்டில் நெவ்வாயியை இரகசியமாக சந்தித்துள்ளார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த ஆண்டிக்காளை அரிவாளால் இளையராஜாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளையராஜாவின் உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கீழவளவு காவல்துறையினர் ஆண்டிக்காளையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |