வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததாக அப்பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் குன்னத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குன்னத்தூர் காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்தவரை பார்த்தனர். அதில் பிணமாக கிடந்தவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாலிபர் தலையில் காயமும், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் சிவப்பு நிறத்தில் டீ சர்ட்டும் பேண்ட்டும் அணிந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திருப்பூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இந்நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி மூலவயல் நவக்காடு பிரிவு வரை சென்ற மோப்பநாய் திரும்பி வந்துவிட்டது.
இதனையடுத்து குன்னத்தூர் பகுதியில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் உள்ளன. அங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள சில வாலிபர்கள் குளத்து பகுதிக்கு வந்து சென்றதாக அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்ததற்கான காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.