Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மகனை உறவினர் வீட்டிற்கு அனுப்பிய தாய்…. கணவனின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தொழிலாளி கட்டையால் அடித்து மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சோழவித்தியாசபுரம் பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரசாத், சூர்யா ஆகிய 2 மகன்களும் கீதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கீதாவிற்கு வருகிற 28-ஆம் தேதி  திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் ரேவதி, கார்த்தி இருவரும் தங்கள் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு வீடு திரும்பினர். அப்போது கார்த்தி வளர்த்து வந்த வெள்ளாடு வந்து வீட்டின் உள்ளிருந்துள்ளது.

இதனை பார்த்த கார்த்தி பிரசாத்திடம் ஆட்டை பிடித்து கட்ட வேண்டியதுதானே என்று கூறியுள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை ரேவதி சமாதானம் செய்துவிட்டு பிரசாத்தை அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டு வந்துள்ளார். அப்போது மனைவியிடம் கார்த்தி ஏன் மகனை உறவினர் வீட்டிற்கு அனுப்பினாய்? என்று கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி அருகில் கிடந்த கட்டையை எடுத்து ரேவதியின் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேவதி மயங்கி விழுந்துள்ளார்.

இதனை பார்த்த உறவினர்கள் ரேவதியை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரேவதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கீழையூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மனைவியை கொலை செய்த கார்த்தி நாகை கோர்ட்டில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |