தந்தையை தாக்கிய வரை பல வருடம் கழித்து மகன் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபிலேஸ் என்பவரின் தந்தைக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு கிருஷ்ணன் அபிலேஷின் தந்தையை தாக்கியுள்ளார்.
இதனால் கிருஷ்ணன் மீது கோபம் கொண்டிருந்த அபிலேஸ் நேற்று இரவு அண்ணா நகரில் இருக்கும் கோவில் முன்பு கிருஷ்ணன் வந்து கொண்டிருந்த போது திடீரெனவந்து கத்தியால் கிருஷ்ணனின் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
வெட்டுப்பட்ட கிருஷ்ணன் சம்பவ இடத்தில் சரிந்து விழுந்தார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் கிருஷ்ணன். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கத்தியால் வெட்டியது அபிலேஸ் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அபிலேஸ் மற்றும் அவருடன் இருந்த நண்பனையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.