விருந்தில் தலைக்கறி குடல்கறி வைக்காத காரணத்தினால் நண்பனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டம் ஐயன் காடு பகுதியை சேர்ந்தவர் துரையன் உமா தம்பதியினர். துரையனது ஊரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அவரது வீட்டில் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார். கிடா விருந்து போடப்பட்டு விருந்து முடிந்ததும் நண்பர்களுடன் நெறிமேட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார் துரையன்.
அப்போது நண்பர்களிடையே விருந்தின் தொடர்பாக பேச்சுவார்த்தை எழுந்து “ஏன்டா எனக்கு தலைக்கறி வைக்கல..?, “ஏண்டா எனக்கு குடல்கறி வைக்கல..? என ஆள்மாறி ஆள்மாறி துரையனிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நண்பர்கள் மூவரும் துறையனை கடுமையாக தாக்கி அங்கு கிடந்த பெரிய கல்லொன்று எடுத்து துரையன் தலையில் போட்டு விட்டனர்.
இதில் காயம் ஏற்பட்டதுடன் உயிருக்கு போராடினார் துரையன். தாக்கிய நண்பர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அக்கம்பக்கத்தினர் துரையனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் துரையன். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து துரையன் நண்பர்கள் மூவரையும் கைது செய்தனர்.