Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலித் இளைஞர் கொலை வழக்கு விவகாரம் : “அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரிக்கை”

தலித் இளைஞன் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மாவட்டம் காரை கிராமத்தில் தலித் இளைஞர் சக்திவேல் கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தலித் மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தடுத்திட வேண்டும் என்றார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,

“கொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீங்கள் கைது செய்ய வேண்டும். அதே போல் அதிகாரிகள் யார் யார் அங்கு இருந்தார்களோ அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அப்போதுதான் இதற்கு மேல் நடக்கும் சம்பவங்களில் காவல்துறை எச்சரிக்கையாக நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட சாதி வெறி சாதிவெறியர்கள் சிலரால் சட்ட ஒழுங்கு சீர் கெடுவதற்கான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு இந்த சாதியின் பெயரால் கொடுக்கப்படுகிற தண்டனைகளை தடுப்பதற்கு  உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

Categories

Tech |