Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன கொல்ல வராங்க… பெற்றோருக்கு கத்திக்குத்து…. மகனின் வெறிச்செயல்….!!

பெற்றோர் மற்றும் அண்ணனை கத்தியால் குத்திய வாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் நேசமணி நகர் நகரின் பார்க் அவென்யூ என்னும் பகுதியில் வசிப்பவர் ஜெயராஜ். இவர் ஒரு அரசு பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவருடைய மனைவியின் பெயர் ஷாலினி. ஜேக்கப் ஜெகன் என இரண்டு மகன்கள் இவர்களுக்கு இருந்தனர். ஜெகன் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்கிறார், ஜேக்கப் எம்சிஏ பட்டம் பெற்றவர். சம்பவத்தன்று வீட்டில் அலறல்  சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது ஆவேசமாக மாடியில் நின்று கொண்டிருந்த ஜேக்கப் திடீரென மாடியில் இருந்து குதித்து விட்டார்.

இந்நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் உள்ளே ஜெய் ஷாலினி மற்றும் ஜெகன் ஆகியோர் கத்தியினால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டறிந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. சில நாட்களாக ஜேக்கப் மிகவும் கோபப்படுவதும் தன்னை யாரோ கொல்ல முயற்சிக்கிறார்கள் என கூறுவதுமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஜேக்கப் தன் பெற்றோர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக்கேட்டார் அவர் அண்ணன் ஜெகன். இதனால் கோபமடைந்த ஜெக்கப் ஜெகனை கத்தியால் குத்தியுள்ளார். இவர்களை தடுக்க வந்த ஜெயராஜ் மற்றும் ஷாலினியும் முகம் மற்றும் கழுத்தில் படுகாயம் ஏற்படும்படி சரமாரியாக குத்தியுள்ளார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தனர். இதனைத்தொடர்ந்து ஜேக்கப் வீட்டின் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதனை குறித்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |