உக்ரேன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்கு ரஷ்ய சிறப்பு ஏஜென்சி மேற்கொண்ட திட்டம் தடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
ரஷ்ய நாட்டின் சிறப்பு ஏஜென்சி தலைமையில் 25 நபர்கள் கொண்ட ராணுவ குழுவினரை ஹங்கேரி-ஸ்லோவாக்கியா எல்லைப்பகுதியில் உக்ரைன் அதிகாரிகள் பிடித்துவிட்டனர். இந்த குழுவினர் உக்ரைன் அதிபரை கொல்வதையே நோக்கமாகக் கொண்டிருந்துள்ளனர்.
உக்ரைன் அதிபர், தங்கள் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது முதல் ரஷ்யாவின் முதல் இலக்கு தான் தான் என்று கூறிவந்தார். இந்நிலையில் உக்ரைன் ரஷ்ய குழுவினரை எல்லையில் பிடித்துள்ளனர்.