ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரை மசூதிக்குள் நுழைந்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி என்ற கட்சியினுடைய தலைவராக இருக்கும் ஹெக்மத்யார் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் நேற்று தன் ஆதரவாளர்களுடன் மசூதியில் இருந்த போது, அங்கு பர்தா அணிந்த சிலர் நுழைந்திருக்கிறார்கள்.
அதன் பிறகு, அந்த கும்பல் திடீரென்று மசூதியில் இருந்தவர்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்ள தொடங்கியதில் ஒரு நபர் பலியானார். இருவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.