Categories
உலக செய்திகள்

சிறுமியை கொலை செய்த முன்னாள் இராணுவ வீரர்.. விசாரணையில் தெரிய வந்த புதிய தகவல்..!!

பிரான்சில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் சிறுமியை கொன்ற வழக்கில் கைதான நிலையில், சக இராணுவ வீரரையும் கொன்றது தெரியவந்துள்ளது.  

பிரான்சில் முன்னாள் ராணுவ வீரரான Nordahl Lelandais என்ற 38 வயது நபர் கடந்த 2017ம் வருடத்தில் 8 வயதுடைய Maelys de Araujo என்ற சிறுமியை கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அடுத்த வருடம், இந்த வழக்கிற்கான விசாரணை நீதிமன்றத்திற்கு வரவுள்ளது.

இந்நிலையில் Nordahl, விசாரணையின் போது, கடந்த 2017 ஆம் வருடத்தில் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி அன்று என் காரில் லிப்ட் கேட்டு சக ராணுவ வீரர் Corporal Arthur Noyer என்பவர் ஏறினார். அப்போது அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதில் அவர் என்னை தாக்கியதால், நான் திரும்ப அடித்தபோது அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு, இருபது வருடத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் Nordahl, இந்த இரண்டு கொலைகளும் எதிர்பாராமல் நடந்ததாக கூறியுள்ளார்.

Categories

Tech |