Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டேய்..! யாருட சண்டைக்கு வார ? உதவியவரால் பறிபோன உயிர்… தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம் …!!

லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் இருக்கும் மணல் மேட்டை சேர்ந்தவர் ராமலிங்கம்-முத்துலட்சுமி தம்பதியினர். லாரி டிரைவர் தொழில் செய்து வரும் இவருக்கு ஜெகதீசன், வர்ஷா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். மேலும் ராமலிங்கம் பள்ளியக்ரஹாரம் பைபாஸ் சாலையில் ஒரு டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். அந்த பாருக்கு செல்லும் வழியில் சாலைகள் மழைநீரால் சேதமடைந்து இருப்பதனால் மணல் அடிக்குமாறு ராமலிங்கம் ரகுவரன் என்ற லாரி டிரைவரிடம் சொல்லி உள்ளார்.

ரகுவரனும் லாரியில் மணல் ஏற்றி டாஸ்மாக் செல்லும் சாலையில் அடித்துள்ளார். மணல் அடிப்பதற்கான தொகையை ராமலிங்கம் டாஸ்மார்க் நடத்துபவரிடமிருந்து வாங்கி ரகுவரனிடம் கொடுத்துள்ளார். ரகுவரன் பணத்தை எண்ணிப் பார்த்தபோது பணம் குறைவாக இருப்பதை பார்த்து ராமலிங்கத்திடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் அருகில் நின்று கொண்டிருந்த ராமலிங்கத்தின் தங்கை கணவரான மணிமாறன் தனது கையில் உள்ள பீர் பாட்டிலால் ரகுவரனை தாக்கியுள்ளார். அந்த சமயம் உடைந்த பாட்டில் ராமலிங்கத்தின் கையில் பட்டு நரம்புத் துண்டாகியது.

பின்பு அவர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் ராமலிங்கம் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் காயமடைந்த ரகுவரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நடுக்காவேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |