Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ… தவறை தட்டிகேட்ட தம்பி… மாமாவின் வெறிச்செயல்… கோவையில் பரபரப்பு…!!

குடிபோதையில் அக்காவிடம் தகராறு செய்த மாமாவை தட்டிக்கேட்ட தம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் கனகரத்தினம் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இவரும் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அனுசுயாவின் தம்பி பழனிராஜா என்பவர் தனது அக்காள் வீட்டிற்கு வந்து, அங்கேயே தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் குடித்துவிட்டு வந்த கனகரத்தினம் அனுசியாவிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். அப்போது அனுசுயாவின் தம்பியான பழனிராஜா ஏன் இவ்வாறு குடித்துவிட்டு வந்து அக்காவிடம் தினமும் சண்டை போடுகிறீர்கள் என்று அவரது மாமாவிடம் கேட்டுள்ளார். அதற்கு கனகரத்தினம் நான் அப்படித்தான் செய்வேன் என்றும், உன்னால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து கொள் என்றும் பழனி ராஜாவிடம் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து பழனிராஜா அவரது அறைக்கு சென்ற பின், கழிவறைக்கு சென்று விட்டு கத்தியை எடுத்துக்கொண்டு கனகரத்தினம் பழனிராஜாவின் அறைக்குள் நுழைந்து விட்டார். அதன் பின் கட்டிலில் படுத்திருந்த பழனிராஜாவை கனகரத்தினம் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டார். இதனால் படுகாயமடைந்த பழனிராஜாவின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அனுசியா மற்றும் அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பழனி ராஜாவை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வால்பாறை போலீசார் தலைமறைவான கனகரத்தினம் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் மறைந்திருந்த கனகரத்தினத்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |