Categories
தேசிய செய்திகள்

ஏன் என்ன விட்டு விலகி போற… மாணவியின் கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர்… சடலத்துடன் போராடிய மாணவர்கள்…!!

சரியாக பேசவில்லை என்ற கோபத்தில் உடன் படிக்கும் மாணவியின் கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் அனுஷா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஷ்ணுவர்த்தன் ரெட்டி என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து கடந்த இரண்டு வருடங்களாக நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக திடீரென விஷ்ணுவிடம் அனுஷா பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்த பிறகு விஷ்ணு அனுஷாவிடம் உன்னை உனது வீட்டிற்கு கொண்டு விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து விஷ்ணு கூப்பிட்டதால் அனுஷா அவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அனுஷாவிடம் போகும் வழியிலேயே விஷ்ணு ஏன் என்னை விட்டு விலகி செல்கிறாய் என்று கூறி தகராறு செய்துள்ளார். இந்த சண்டையில் கோபமடைந்த விஷ்ணு திடீரென அனுஷாவின் கழுத்தை நெரித்துவிட்டார். இதில் அனுஷா பரிதாபமாக உயிரிழந்த பின் யாருக்கும் தெரியாமல் இருக்க அவரது சடலத்தை அருகில் உள்ள கழிவு நீர் ஓடையில் விஷ்ணு வீசிவிட்டார்.

இதனை தொடர்ந்து அருகில் இருந்த ஒரு காவல் நிலையத்தில் சிறிது நேரம் கழித்து விஷ்ணு சரணடைந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள் அனுஷாவின் சடலத்தை தூக்கிக்கொண்டு சாலைமறியலில் ஈடுபட்டதுடன், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்ட அறிவிப்பில், அனுஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடியிருப்பதற்கு அரசு சார்பில் ஒரு வீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதோடு குற்றவாளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

Categories

Tech |