சாத்தான்குளம் சம்பவம் எஸ்.ஐ ரகு கணேஷை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று காலை முதல் விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட முக்கிய காவல் துணை ஆய்வாளராக பார்க்கப்படும் எஸ்.ஐ ரகு கணேஷை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கோவில்பட்டிக்கு எஸ்.ஐ ரகு கணேஷை அழைத்துச் சென்று கொண்டு இருக்கின்றார்கள்.
இதனிடையே எஸ்.ஐ ரகு கணேஷுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணை குறித்து பேசிய சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் கூறும் போது, இந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர்கள் இருவர் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சில அதிகாரிகள் பற்றியும் விசாரணை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.