சமையல் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் அவரது நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் மாரியப்பன் என்ற சமையல் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவரும் இவருடைய நண்பர்களான வேலுச்சாமி மற்றும் கணேசன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் அண்ணா நகர் மெயின் ரோட்டில் நண்பர்கள் இணைந்து மது குடித்த பிறகு அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வேலுசாமி மற்றும் கணேசன் ஆகிய இருவரும் மாரியப்பனை கற்கள் மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பனின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய வேலுசாமி மற்றும் கணேசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.