Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை வழக்கு பதிவு …!!

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி நேற்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  நேற்று மாலை முதலே சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உதவி காவல் ஆய்வாளராக இந்து ரகு கணேஷிடம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த சம்பவத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளரான பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் தப்பித்து போனதாக ஒரு தகவல் இருந்தது. அதன் அடிப்படையில் தேடிவந்து சிபிசிஐடி போலீசார் அவர்கள் மூவரையும் அதிகாலையில் கைது செய்து தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் பகுதியில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் பிடித்து தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர். அந்த கைது அடிப்படையில் தற்போது சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் காவல் உதவி ஆய்வாளர், இரண்டு காவலர்கள் மற்றும் ஆய்வாளர் உள்ளிட்ட நால்வரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |