முதியவரை சொத்துக்காக மகன் மற்றும் மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் உத்தப்புரம் பகுதியை சேர்ந்தவர் ராசு இவர் கடந்த மாதம் 22ஆம் தேதி மர்மமான முறையில் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்தார். ராசுவின் உடலை பார்த்த அவரது மகன் மற்றும் மருமகள் அழுது புரண்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தெரியவந்த தகவல் உசிலம்பட்டி கிராமமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முதியவரை கொலை செய்தது அவரது மகன் மற்றும் மருமகளான கருப்பையாவும் தர்மாவும் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சொத்துக்காக முதியவரை கொலை செய்த கருப்பையாவும் தர்மாவும் தங்களது உதவிக்காக அய்யனார் என்பவரையும் கூட்டு சேர்த்துள்ளனர். விசாரணையில் உண்மை தெரியவந்த நிலையில் முதியவரை கொலை செய்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சொத்துக்காக சொந்த தந்தையை மகன் மனைவியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.