Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

270 சவரன் நகை போதாதா?… காரில் இறந்து கிடந்த பெண்… எங்க மகள கொன்னுட்டாங்க… பெற்றோர் பரபரப்பு புகார்..!!

வரதட்சணை கொடுமையால் தனது மகள் கொலை செய்யப்பட்டு விட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்

மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் தனது மகள் கவிநிலாவிற்கு சிவகாசியை சேர்ந்த துளசிராம் என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். திருமண நிகழ்வின் போது 230 சவரன் நகையை வரதட்சணையாக வழங்கியதுடன் மகளின் வளைகாப்பு போது 45 சவரன் நகையை வழங்கியுள்ளார். கவிநிலாவிற்கும் துளசிராமக்கும் இரண்டு வயதில் ஆண் குழந்தையும் 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.

இதனிடையே கவிநிலாவை துளசிராம் தொடர்ந்து துன்புறுத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கவிநிலா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு கணவர் வீட்டிற்கு போகாமல் இருந்த அவரை பெற்றோர் அழைத்து சென்று கணவர் வீட்டில் விட்டதோடு சில நாட்களில் 45 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி கவிநிலா தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விரைந்து வந்த அவர்கள் வீட்டின் வெளியே இருந்து காரில் கவிநிலாவின் உடல் இருப்பதை கண்டு கதறினர். அதன்பிறகு சிவகாசி காவல் நிலையத்திற்கு சென்ற அவர்கள் எங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். ஆனால் வீட்டில் தூக்கு மாட்டியதற்கான தடையமில்லை.

என் மகளின் கழுத்தில் காயம் இல்லை என்று கூறியதோடு துளசிராம் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறினார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கவிநிலவின் மரணத்தை சந்தேக மரணம் என பதிவு செய்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே துளசிராம் மற்றும் அவரது பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |