தனது காதலியை வேறொருவன் விரும்புகிறான் என்ற சந்தேகத்தில் அவனை கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கிழக்கு லண்டனை சேர்ந்த கார்லோஸ் என்பவர் அஷ்லி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்லோஸ் தான் வசித்து வந்த அடுக்குமாடி வீட்டில் தங்கியிருந்த டேவிட் என்பவர் தனது காதலியான அஷ்லி மீது ஆசைப்படுவதாக கற்பனை செய்துகொண்டு அவர் டேவிட் அஷ்லிக்கு முத்தம் கொடுத்து விட்டதாகவும் நினைத்துள்ளார். இது அனைத்தும் சேர்ந்து டேவிட் மீது கார்லோஸ்க்கு கோபத்தை ஏற்படுத்த அவருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சென்ற வருடம் மார்ச் மாதம் 6ஆம் தேதி டேவிட்டை கார்லோஸ் கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
இதனை தொடர்ந்து கார்லோஸை காவல்துறையினர் கைது செய்து அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது வழக்கறிஞர் கூறியதாவது “கொலை செய்யப்பட்ட அன்று டேவிட் தனது உறவினருக்கு செல்போன் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் கார்லோஸ் அவரது காதலியை முத்தமிட்டேன் என கேட்டு தகராறு செய்கின்றார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என குறிப்பிட்டிருந்தார்.
இதோடு அதிக பொறாமை குணம் கொண்ட கார்லோஸ் தனது காதலியுடன் ரயிலில் சென்ற சமயம் ஒரு நபர் அவரது காதலியை பார்த்துள்ளார். இதனால் கோபம் அடைந்த கார்லோஸ் என் காதலியை எப்படி நீ பார்க்கலாம் என அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனடிப்படையில் கார்லோஸ் மூர்க்கத்தனம் கொண்டவர் என்பது உறுதியாகின்றது” எனக் கூறினார். இவை அனைத்தையும் கேட்ட நீதிபதி அப்பாவி இளைஞனை கொன்ற கார்லோஸ் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட உள்ளது.