தந்தையால் கொல்லபட்டுள்ளார்கள் என்று கூறப்படும் பிள்ளைகளின் தாயார், தானும் அவர்களுடன் இறந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஸ்பெயினில் ஏப்ரல் 27ஆம் தேதி தன்னுடைய இரு மகள்களை கூட்டி சென்ற தாமஸ் என்பவர், அவருடைய மனைவியான Beatriz Zimmerman னிடம் குழந்தைகளை இனி உயிருடன் காணமுடியாது என்று அச்சுறுத்தி விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்படியே தாமஸ் கூட்டிச் சென்ற இரு மகள்களில் மூத்த மகளான ஒலிவியா, Tenerf என்னும் கடற்கரையில் கடந்த வியாழக்கிழமையன்று 3000 அடி ஆழத்தில் கடலுக்குள் ஒரு பையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் தாமஸ்சையும், 2 ஆவது குழந்தையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இரு குழந்தைகளின் தாயாரான Beatriz Zimmerman சமூகவலைத்தளத்தில் மிகவும் வருத்தத்துடன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தமது பிள்ளைகளின் மரணம், நாட்டில் இருக்கும் மற்ற குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பை கொடுப்பதற்கு வழிவகுக்கும் என்றுள்ளார்.
மேலும் நானும் என்னுடைய குழந்தைகளுடனே ஒன்றாக இறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் நான் வாழ்க்கை முழுவதும் என்னுடைய மகள்கள் இறந்த துயரத்தை அனுபவிக்க வேண்டும் என்றே என்னை தாமஸ் உயிருடன் விட்டு வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.