சுவிட்சர்லாந்தில் துருக்கிய நபர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்ததோடு ரத்த காயங்களுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று சூரிச் மாவட்டம் Altstetten என்ற பகுதியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான 30 வயது பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்மணியின் கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஓராண்டுக்கு முன்பு அந்த துருக்கிய நபர் (46) அந்தப் பெண்மணியை விட்டு பிரிந்து சென்றது தெரியவந்துள்ளது.
இருப்பினும் அந்த நபர் தனது பிள்ளைகளும், மனைவியும் வசித்து வரும் குடியிருப்புக்கு அடிக்கடி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்மணி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த நபரை காவல்துறையினரும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று நடந்த வாக்குவாதத்தில் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்த அந்த நபர் ரத்த காயங்களுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.